Paristamil Navigation Paristamil advert login

‘வாரனாசி’ பட அறிவிப்புக்கே இத்தனைக் கோடி ரூபாய் செலவா?

‘வாரனாசி’ பட அறிவிப்புக்கே இத்தனைக் கோடி ரூபாய் செலவா?

19 கார்த்திகை 2025 புதன் 14:42 | பார்வைகள் : 186


ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் ‘வாரனாசி’ படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ஒரிசா மற்றும் கென்யாவில் அடர் காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக வாரணாசி செட் அமைத்துக் காட்சிகளை எடுக்கவுள்ளார் ராஜமௌலி. இந்நிலையில் இந்த படத்துக்காக ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு ஆகிய இருவரும் பெறும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராஜமௌலி 200 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் இலாபத்தில் பங்கு என சம்பளம் வாங்கவுள்ளாராம். அதுபோல மகேஷ் பாபு 100 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் இலாபத்தில் பங்கு பெறவுள்ளாராம்.

சமீபத்தில் பிரம்மாண்டமாக இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானது. அதை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய சினிமாவில் இதுவரை எந்த படக்குழுவினரும் செலவிடாத ஒரு தொகையாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் விளம்பரப் பணிகளுக்காக மட்டுமே சுமார் 200 கோடி ரூபாய் வரை ஒதுக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்