Paristamil Navigation Paristamil advert login

வீட்டு வசதிகள் புதுப்பிப்பு காரணமாக வரி அதிகரிப்பு!!

வீட்டு வசதிகள் புதுப்பிப்பு காரணமாக வரி அதிகரிப்பு!!

19 கார்த்திகை 2025 புதன் 12:31 | பார்வைகள் : 345


2026 ஆம் ஆண்டில், பொருளாதார அமைச்சகம் மேற்கொள்ளும் தரவு புதுப்பிப்பின் காரணமாக சுமார் 74 லட்சம் வீடுகளுக்கு நில வரி அதிகரிக்கவுள்ளது. 

குடிநீர், மின்சாரம், கழிப்பறை, குளியலறை கழுவும் தொட்டி போன்ற “வசதிகள்” வீடுகளில் இருப்பது பரப்பளவாக கணக்கிடப்பட்டதால், வரி கணக்கீடு உயரும் என்று Bercy தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த தரவுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் சராசரியாக 63 யூரோக்கள் கூடுதல் வரியையும், உள்ளூர் நிர்வாகங்களுக்கு 466 மில்லியன் யூரோ கூடுதல் வருவாயையும் ஏற்படுத்தும் என Le Parisien தெரிவித்துள்ளது.

32 மில்லியன் சொந்தக்காரர்கள் செலுத்தும் நில வரி, சதுர மீட்டர் பரப்பளவுடன் கூட, இந்த வகை “வசதிகள்” இருப்பதையும் சார்ந்துள்ளது. இந்த ஒவ்வொரு வசதியும் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய பரப்பளவை செயற்கையாக அதிகரிக்கச் செய்யும்; அதன் அடிப்படையில் நில வரியும் அதிகரிக்கும்.

இந்த நடவடிக்கையின் நோக்கம் வரி கணக்கீட்டில் நியாயம் மற்றும் துல்லியத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் விளக்கியுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட வசதிகள் இல்லாத சொந்தக்காரர்கள் தங்கள் நிலையை நிரூபித்து எதிர்ப்பு மனு அளிக்கலாம் என்று பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்