Paristamil Navigation Paristamil advert login

Whatsapp-க்கு போட்டியாக X Chat : எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 Whatsapp-க்கு போட்டியாக X Chat : எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

19 கார்த்திகை 2025 புதன் 10:58 | பார்வைகள் : 810


எலான் மஸ்க் “X Chat” என்ற புதிய செய்தி பரிமாற்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகின் முன்னணி செய்தி பரிமாற்று செயலியாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் நிலைத்து வருகிறது.

இந்நிலையில் Whatsapp செயலியுடன் போட்டியிடும் வகையில் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய xAi நிறுவனத்தின் மூலம் X தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட X Chat புதிய செய்திப் பரிமாற்ற செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

2022ம் ஆண்டு X தளத்தினை எலான் மஸ்க் வாங்கிய நிலையில்,  X Chat செயலியானது எல்லாவற்றுக்குமான செயலியாக(Everything App) இருக்கும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ்ஆப் மற்றும் அரட்டை போன்ற செய்தி பரிமாற்ற தளங்களுக்கு போட்டியாக தனியுரிமை மையப்படுத்தப்பட்ட X Chat உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து உரையாடல்களும், கோப்பு பரிமாற்றங்களும் End to End Encrypted செய்யப்பட்ட அதாவது குறியாக்கம் செய்யப்பட்டு பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

இந்த X Chat செயலியில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

X Chat செயலியில் அனுப்பப்பட்ட செய்தியில் திருத்தம் செய்யவும், முழுமையாக நீக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி வாட்ஸ்ஆப்பில் இருக்கும் அதே வேளையில், வாட்ஸ் ஆப்பை போல் அல்லாமல்  X Chat செயலியில் நீக்கம் செய்யப்பட்ட குறியீட்டை எதிர் பயனருக்கு காட்டாது.

X Chat செயலியில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை திரைப்பதிவு செய்ய முடியாது.

மேலும் X Chat செயலி விளம்பரங்கள் இல்லாத சுத்தமான பயனர் தரவை கொண்டுள்ளது.

X Chat செயலி ஆனது iOS மற்றும் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், விரைவில் Android-யிலும் செயலி வெளியாகும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்