Paristamil Navigation Paristamil advert login

ஸ்மார்ட்போன்களில் டிஜிட்டல் Carte Vitale வசதி!!

ஸ்மார்ட்போன்களில் டிஜிட்டல் Carte Vitale வசதி!!

18 கார்த்திகை 2025 செவ்வாய் 14:42 | பார்வைகள் : 961


இன்று முதல் டிஜிட்டல் Carte Vitale பயன்பாட்டை தற்போது பிரான்ஸ் முழுவதும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். முன்பு France Identité செயலி மற்றும் புதிய அடையாள அட்டை இருந்தால்தான் நிறுவ முடிந்தது; தற்போது Carte Vitale செயலியை மட்டும் பயன்படுத்தி செயல்படுத்தலாம். 

Carte Vitale செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, சமூக பாதுகாப்பு எண்ணை உள்ளிடவும் (numéro de Sécurité sociale), அல்லது உங்கள் கார்ட் வித்தலை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் முக அடையாள சரிபார்ப்பைச் செய்ய வேண்டும்; இது நீங்கள் தான் என்பதை உறுதிப்படுத்த அத்தியாவசியமான பகுதியாகும். 

France Identité வழி மூலமும் கார்ட் வித்தலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் சிலருக்கு அது எளிதாகவும் குறைந்த பிழைகளுடனும் செயல்படுகிறது.

Carte Vitale செயலியை நிறுவிய பிறகு, மருத்துவர் அல்லது மருந்தகங்களில் QR குறியீடு அல்லது Android மொபைல்களில் NFC மூலம் பயன்படுத்தலாம். பெரும்பாலான தொலைபேசிகள் QR முறைக்கு இணக்கமானவை. ஆனால் அனைத்து சுகாதார நிபுணர்களும் இன்னும் இதற்கான உபகரணங்களை வைத்திருக்கவில்லை: சராசரியாக 65% மருந்தகர்கள் மற்றும் 24% பொதுமருத்துவர்கள் மட்டுமே டிஜிட்டல் Carte Vitale மூலம் பில்லிங் செய்யும் வசதியை வைத்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்