‘பேரரசி’யாக நயன்தாரா…
18 கார்த்திகை 2025 செவ்வாய் 15:18 | பார்வைகள் : 843
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் தற்போது ஏகப்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படத்தில் அம்மனாக நடித்து வருகிறார் நயன்தாரா. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் தற்போது படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த போஸ்டரானது இன்று (நவம்பர் 18) நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தது நயன்தாரா, கவின் உடன் இணைந்து ‘ஹாய்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு எடாவன் இயக்கும் இந்த படமானது ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. நயன்தாராவின் பிறந்தநாளான இன்று இந்த படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரஜினி மற்றும் கமல்ஹாசனின் ரெஃபரன்ஸ் இருக்கிறது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தவிர நயன்தாரா, சிம்ஹா, ஜெய் சிம்ஹா, ஸ்ரீராம ராஜ்ஜியம் ஆகிய படங்களுக்கு பிறகு நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதை படக்குழு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வீடியோவில் நயன்தாரா பேரரசி போல் காட்டப்பட்டுள்ளார். கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாகவும், இந்த படத்தின் பூஜை வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதை பார்க்கும் போது இது ஃபேண்டஸி படமாக இருக்கும் போல் தெரிகிறது. இந்த படமானது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111வது படம் (NBK111) என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan