Paristamil Navigation Paristamil advert login

2045ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் வசிக்கவுள்ள மக்கள்

2045ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் வசிக்கவுள்ள மக்கள்

18 கார்த்திகை 2025 செவ்வாய் 10:53 | பார்வைகள் : 732


2045ஆம் ஆண்டுக்குள் இலட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என தொழிலதிபர் ஜெப் பெஜோஸ் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய தொழில்நுட்ப வார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஓரிரு தசாப்தங்களில் இலட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள், இது வேகமாக நடக்கப்போகிறது.

இது தேவை காரணமாக நடக்காது. மக்களாகவே விரும்பி விண்வெளியில் வசிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை நமது வளர்ச்சியை ஆதரிக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்