Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய அணித்தலைவர் அசலங்கா

 பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய அணித்தலைவர் அசலங்கா

18 கார்த்திகை 2025 செவ்வாய் 10:53 | பார்வைகள் : 807


பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு தொடரில் இருந்து 2 இலங்கை வீரர்கள் விலகி, நாடு திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தான் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே பங்குபெறும் முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் 18-11-2025 தொடங்குகிறது.

ராவல்பிண்டியில் நடைபெறும் முதல் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகிறது.

கடந்த நவம்பர் 14 ஆம் திகதி, இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அச்சமடைந்த இலங்கை வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப திட்டமிட்டனர்.  

ஆனால் பாகிஸ்தான் அரசு வீரர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்துள்ளதால், வீரர்கள் நாடு திரும்பக்கூடாது, விளையாடாமல் நாடு திரும்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரித்தது.

இந்நிலையில், இலங்கை அணித்தலைவர் சாரித் அசலங்கா(Charith Asalanka) மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ(asitha fernando) நாடு திரும்புவதாகவும், இந்த தொடரில் இருவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால், உடல்நலக்குறைவு காரணமாகவே நாடு திரும்புவதாக அறிவித்துள்ளது.

அசலங்காவிற்கு பதிலாக தசுன் ஷனகா(Dasun Shanaka) இலங்கையை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அசிதா பெர்னாண்டோவிற்கு பதிலாக பவன் ரத்நாயக்க(Pavan Rathnayake) அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது 12 துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 6 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்