Paristamil Navigation Paristamil advert login

சுந்தர்.சி-யின் கதைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றனவா?

சுந்தர்.சி-யின் கதைகள் தொடர்ந்து  நிராகரிக்கப்படுகின்றனவா?

17 கார்த்திகை 2025 திங்கள் 15:54 | பார்வைகள் : 266


சுந்தர்.சி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வருகிறார்.அவருக்கு சொன்னதை தான் ரஜினிக்கும் சொன்னாரா?.... தொடர்ந்து நிராகரிக்கப்படும் சுந்தர்.சி-யின் கதைகள்!இவர் தற்போது நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்குகிறார். இது தவிர விஷால் படம் ஒன்றை இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுந்தர்.சி – ரஜினி கூட்டணியில் புதிய படம் (தலைவர் 173) உருவாகப்போவதாகவும் அதனை கமல்ஹாசன் தயாரிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ஒரு சில நாட்களிலேயே அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்தார் சுந்தர்.சி.

இந்த தகவல் பெரிய அளவில் பேசப்பட்டது.அவருக்கு சொன்னதை தான் ரஜினிக்கும் சொன்னாரா?.... தொடர்ந்து நிராகரிக்கப்படும் சுந்தர்.சி-யின் கதைகள்!ஏனென்றால் ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணையப்போவதாக சொல்லப்பட்ட சுந்தர்.சி – ரஜினி கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதற்கு பின்னர் திடீரென்று சுந்தர்.சி, ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகியது பலருக்கும் ஏமாற்றத்தை தந்தது.

ஆகையினால் இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? என பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வந்தனர். அதன்படி சுந்தர்.சி-யின் கதை ரஜினியை திருப்திபடுத்தவில்லை என்பதனால் தான் தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், விஜய் சேதுபதியை வைத்து சுந்தர்.சி புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாகவும் அதில் சந்தானமும் நடிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு விஜய் சேதுபதிக்கு அந்த கதை பிடிக்காததால், படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. தற்போது அதே கதையை தான் சுந்தர்.சி, ரஜினியிடம் கூறியதாகவும் ரஜினிக்கு அதில் திருப்திகரம் இல்லை என்பதால் சில மாற்றங்களை செய்யச் சொன்னார் எனவும், சுந்தர்.சி அதற்கேற்ப மாற்றங்களை செய்த பின்னரும் ரஜினியை அந்த கதை கவரவில்லை எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்