Paristamil Navigation Paristamil advert login

நள்ளிரவில் திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றம்!

நள்ளிரவில் திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றம்!

17 கார்த்திகை 2025 திங்கள் 10:54 | பார்வைகள் : 176


திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வெளியிட்டுள்ள ஒரு குரல் பதிவில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு குறித்த சிலை அகற்றப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குறித்த குரல் பதிவில், “8 மணியளவிலே அடாவடியாக சிலை கொண்டு வந்து வைக்கப்பட்ட போது அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு தொலைபேசி அழைப்பு எடுத்து பேசப்பட்டது.

இதன்போது 3 மணித்தியாலங்களுக்குள் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த இடத்தில் விசேட பாதுகாப்பு அணியினர் கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக நாளையதினம் (17) காலை திருகோணமலை மாநகரசபை உறுப்பினர்களை நகரசபையில் ஒன்று கூடுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட குகதாசன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்