Paristamil Navigation Paristamil advert login

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது; பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது; பிரதமர் மோடி

16 கார்த்திகை 2025 ஞாயிறு 07:50 | பார்வைகள் : 100


காங்கிரஸ் கட்சியை இனி காப்பாற்ற முடியாது என்பதை காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக்கொள்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சூரத் விமான நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது; பீஹார் சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை, தங்கள் சொந்த கட்சி உறுப்பினர்களுக்கு கூட விளக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் உள்ளன. அதனால் தான் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவற்றைக் குறை கூறுகின்றனர்.

முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் கட்சியை நாடே ஏற்க மறுத்துவிட்டது. இப்போது காங்கிரஸின் முழு கொள்கையும் இதைச் சுற்றியே உள்ளது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலில் கட்சியில் செயல்பட்டவர்கள் கூட இன்று காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை பார்த்து ஏமாற்றமடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை இனி காப்பாற்ற முடியாது என்பதை காங்கிரஸ் தலைவர்கள் கூட தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள். இளைய எம்.பிக்களை பார்லிமென்டில் பேசவோ தங்கள் தொகுதி பிரச்னைகளை எழுப்பவோ அனுமதிக்கப்படாததால் தங்கள் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

தேஜ கூட்டணி வளர்ச்சியை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் உறுதிபூண்டுள்ளது. இளைஞர்களின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்காத தலைவர்கள், இந்திய இளைஞர்களின் ஆதரவை ஒருபோதும் பெற மாட்டார்கள். லோக் சபா தேர்தலுக்குப்பிறகு காங்கிரஸ கட்சிக்கு தொடர்ந்து சரிவு தான். 5 அல்லது 6 மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை, பீஹாரில் வெற்றி பெற்ற தேஜ கூட்டணியில் இருக்கும் எண்ணிக்கைக்கு சமம். நாடு முழுவதும் எதிர்க்கட்சியின் நிலை பலவீனமடைவதற்கு இதுவே சான்று.

முதல்வர் நிதிஷ் குமாரை அவமதிப்பதை அவர்கள் பழக்கமாக்கிக் கொண்டனர். பீகாரின் மூத்த தலைவர்கள் அவருக்கு எதிராக அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தினர். எதிர்க்கட்சியினரின் இந்த நடத்தையை நாட்டு மக்களும், பீஹார் மக்களும் ஏற்க மறுத்தனர். எதிர்க்கட்சியினர் மீது கசப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு சம்பவங்கள் நடந்தேறின. இதுவே தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தது. பீஹார் மக்களின் திறமைகள் எல்லா இடத்திலும் உள்ளது. அவர்களுக்கு நீங்கள் அரசியல் கற்றுத்தர தேவையில்லை.

பீஹார் தேர்தலில், தலித் மக்கள் அதிகம் உள்ள 38 தொகுதிகளில் 34ல் தேஜ கூட்டணி வெற்றி பெற்றது. சாதி மற்றும் மதம் அடிப்படையிலான நிராகரித்துள்ள பீஹார் மக்கள், ஒற்றுமை மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசை மீண்டும் அமைத்துள்ளனர். பெண்கள், இளைஞர்களிடம் இருந்து பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளது. இந்த சக்திதான் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நாட்டின் அரசியல் திசையை வடிவமைக்க உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்