பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கும் சட்டமூலத்தை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை
15 கார்த்திகை 2025 சனி 12:00 | பார்வைகள் : 1091
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கும் சட்டமூலத்தை பகிரங்கப்படுத்துமாறு சர்வஜன நீதி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் நிதி அமைச்சரிடம் கையளித்துள்ளதாக செய்தி அறிக்கைகளைப் பார்த்தோம்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், நீண்ட காலமாக சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய ஒரு கொடூரமான சட்டமாக உலகளவில் கருதப்படுகிறது. சர்வஜன நீதி அமைப்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரலெழுப்பி வருகிறது.
NPP தேர்தல் அறிக்கையும் அதை முழுமையாக நீக்குவதாக உறுதியளிக்கிறது. புதிய வரைவு சட்டமூலம் இந்த வாக்குறுதியை முழுமையாக பிரதிபலிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அரசாங்கத்தையும், குறிப்பாக நீதி அமைச்சரையும், மேற்கூறிய அறிக்கையையும் வரைவு சடமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
கையெழுத்திட்டவர்கள்:
1. பேராசிரியர் ஜெயதேவா உயங்கொட
2. கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, PC
3. எரான் விக்கிரமரத்ன
4. ஏ. எம். ஃபாயிஸ்
5. எம் ஏ சுமந்திரன், PC
6. சாணக்கியன் இராசமாணிக்கம், பா.உ
7. பவானி பொன்சேகா
8. எர்மிசா டெகல்
9. தடிஷானி பெரேரா
10. ஜெருஷா க்ரொசெட் தம்பையா
11. ஸ்வஸ்திகா அருலிங்கம்
12. ரவிந்திரன் நிலோஷன்
13. பெனிஸ்லோஸ் துஷான்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan