Paristamil Navigation Paristamil advert login

‘தலைவர் 173’ பட இயக்குனர் யார்?

‘தலைவர் 173’ பட இயக்குனர் யார்?

14 கார்த்திகை 2025 வெள்ளி 15:49 | பார்வைகள் : 163


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ‘கூலி’ திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரஜினியின் 173 வது படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதாகவும், கமல்ஹாசன் இதை தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது சுந்தர். சி, தலைவர் 173 படத்தில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஏன் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர். சி விலகிவிட்டார்? இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்பது போன்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ‘தலைவர் 173’ படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதன்படி கார்த்திக் சுப்பராஜ், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கலாம் என பேச்சு அடிபடுறது. ஏற்கனவே ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆதலால் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தால் அதை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இருப்பினும் இனிவரும் நாட்களில் ‘தலைவர் 173’ படத்தை இயக்குவது யார்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்