இந்தியாவில் டெஸ்ட் தொடர் வெற்றி! தென்னாப்பிரிக்கா கேப்டன் தேம்பா பாவுமா கருத்து
14 கார்த்திகை 2025 வெள்ளி 11:59 | பார்வைகள் : 119
இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் வெற்றி தங்களது இரண்டாவது மகத்தான வெற்றியாக இருக்கும் என தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் தேம்பா பாவுமா தெரிவித்துள்ளார்.
தேம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றிய பிறகு, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
2010ம் ஆண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்க அணி, தங்களது நீண்ட கால தோல்வியை சரி செய்யும் உறுதியுடன், வெள்ளிக்கிழமை தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
கேப்டன் தேம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றியை பெற்றுள்ளது. மற்றொரு ஆட்டம் மழையால் டிரா செய்யப்பட்டது.
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் தேம்பா பாவுமா, “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதற்கு ஈடாக எதுவுமே இல்லை.
ஆனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வது என்பது அதற்கு அடுத்தப்படியான வெற்றியாகும். அதுவும் இந்தியாவில் வெல்வது ஆகும்.
இதை நாங்கள் நீண்ட காலமாக செய்யவில்லை, எனவே இதை செய்வது எங்கள் இலக்குகளின் அடுத்த படியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan