Paristamil Navigation Paristamil advert login

விசா, தங்குமிட அட்டைகள் மற்றும் நிர்வாக வரிகளுகாகான கட்டணங்கள் அதிகரிப்பு!!

விசா, தங்குமிட அட்டைகள் மற்றும் நிர்வாக வரிகளுகாகான கட்டணங்கள் அதிகரிப்பு!!

13 கார்த்திகை 2025 வியாழன் 15:21 | பார்வைகள் : 914


அரசு 2026 நிதி மசோதாவின் கீழ், வெளிநாட்டவர்களுக்கான பல நிர்வாக கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

குடியுரிமை (la nationalité) பெறுவதற்கான விண்ணப்பங்களுக்காக €200, தங்குமிட அட்டை வழங்கல் (carte de séjour), புதுப்பித்தல் அல்லது நகல் பெறுவதற்காக €100 (18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு €50), மற்றும் ஒழுங்குமுறை விசா (visa de régularisation) உரிமைக்கு €100 கூடுதல் வரி விதிக்கப்படும். தங்குமிட அட்டைகளுக்கான முத்திரை (timbre pour les titres de séjour) உரிமை €25 உயர்த்தப்படும்.

மேலும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை மாற்ற €40 மற்றும் தற்காலிக தங்குமிட அனுமதிக்காக (autorisation provisoire de séjour) €100 புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. 

இந்த நடவடிக்கை அரசுக்கு சுமார் €160 மில்லியன் கூடுதல் வருவாய் தரும் என கணக்கிடப்படுகிறது. இதனை புலம்பெயர் ஆதரவு அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. La Cimade போன்ற அமைப்புகள், “அரசு ஒரு அடிப்படை உரிமையை வருவாயாக மாற்றுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளன. அவர்கள், இது புலம்பெயர் மக்களைத் தடுக்கவும், அவர்களை புறக்கணிக்கவும் முயலும் அரசியல் நடவடிக்கையாகும் எனக் கூறியுள்ளனர். 

மேலும், ஐரோப்பியா அல்லாத மற்றும் அரசாங்க உதவியில்லாத வெளிநாட்டு மாணவர்களுக்கு வீட்டு வாடகை உதவி (APL) நீக்கப்படுவதாகவும் மசோதா குறிப்பிடுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்