கும்கி-2 திட்டமிட்டபடி வெளியாகுமா?
13 கார்த்திகை 2025 வியாழன் 12:36 | பார்வைகள் : 167
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாக இருந்த கும்கி-2 படத்திற்கு, ஒரு நாளைக்கு முன்பு சிக்கல் எழுந்துள்ளது. மைனா, கும்கி போன்று பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற கனவில் இருந்த இயக்குநர் பிரபு சாலமனுக்கு தலையில் இடியாய் விழுந்துள்ளது நீதிமன்றத்தின் உத்தரவு…
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் பிரபு சாலமன். 26 ஆண்டுகளுக்கு முன்பு ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து 5 படங்களை இயக்கிய போதும், 2010-ம் ஆண்டில் வெளியான ‘மைனா’ அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பின்னர், கும்கி படத்தின் மிக பெரிய வெற்றியின் மூலம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
அடுத்தடுத்து வெளியான கயல், தொடரி போன்ற படங்கள் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. இதனிடையே, சில படங்களைத் தயாரித்து பொருளாதார ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தார். இதனால், இழந்த அனைத்தையும் மீட்கும் நோக்கில், கும்கி-2 படத்தை பிரபு சாலமன் தானே தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், கும்கி-2 படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சினிமா ஃபைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கும்கி-2 படத்தை தயாரிக்க கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபு சாலமன் தன்னிடம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறியுள்ளார்.
அப்போது, படத்தின் வெளியீட்டுக்கு முன்பு பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பித் தருவதாக பிரபு சாலமன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 50 லட்சம் ரூபாயைத் திருப்பித் தராத நிலையில் கும்கி-2 படத்தை நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளதாக சந்திரபிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கும்கி-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் ஆடிப் போயுள்ளது. நீதிமன்ற உத்தரவால் கும்கி-2 திட்டமிட்டபடி வெளியாகுமா? அல்லது இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan