● நவம்பர் 13 - கோர தாக்குதலின் பத்தாம் ஆண்டு நினைவு!!
13 கார்த்திகை 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 351
132 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட நவம்பர் 13, 2015 பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. பிரான்ஸ் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐரோப்பாவையே அதிரச்செய்த இந்த தாக்குதல், ஐரோப்பாவின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கியது.
பரிஸ் மற்றும் புறநகரங்களில் என மொத்தம் ஐந்து இடங்களில் ஆறு தாக்குதல்கள் இடம்பெற்று 130 பேர் உடனடியாகவும், மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி பல மாதங்கள் கழித்தும் உயிரிழந்தனர். 400 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். பிரான்சில் இரண்டாம் உலகப்போரின் பின்னர் அதிகளவானவர்கள் இறந்த மனித தாக்குதல் இதுவாகும்.
இந்த தாக்குதலுக்கு ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்புக்கோரியது. சிரியா மற்றும் ஈராக் மீது பிரான்ஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கோடு இத்தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று பத்தாவது ஆண்டில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தாக்குதல் இடம்பெற்ற இடங்களுக்கு ஜனாதிபதி மக்ரோன் விஜயம் மேற்கொள்ள உள்ளார். நினைவு தூபி திறந்துவைக்கிறார்.
நோர்து-டேம் தேவாலயத்தில் இன்று கண்டாமணி ஒலிக்கவிடப்பட உள்ளது. மாலை 5:57 முதல் 6:02 வரையான நேரத்தில் இந்த காண்டாமணி ஒலிக்க உள்ளது.
ஈஃபிள் கோபுரம், நகரசபை கட்டிடங்கள் நேற்றைய நாளில் மூவர்ணத்தில் ஒளிரவிடப்பட்டது. இன்றும் அது தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan