Paristamil Navigation Paristamil advert login

BHV வணிக மையத்தை விட்டு விலகும் டியோர் மற்றும் கெர்லேன் நிறுவனங்கள்!!

BHV வணிக மையத்தை விட்டு விலகும் டியோர் மற்றும் கெர்லேன் நிறுவனங்கள்!!

12 கார்த்திகை 2025 புதன் 21:03 | பார்வைகள் : 445


பரிஸின் பிஎச்வி மரேஸ் (BHV Marais) வணிக மையத்தில் நிலுவைத் தொகை செலுத்தப்படாததற்காக பிரபல வாசனைத் திரவ நிறுவனங்களான டியோர் (Dior) மற்றும் கெர்லேன் (Guerlain) தங்களது விற்பனை இடங்களை மூடி விலகியுள்ளன. 

இந்த இரண்டு பிராண்டுகளும் LVMH குழுமத்துக்குச் சொந்தமானவை. இதேசமயம், சீனாவின் அதிவேக ஆடை விற்பனை நிறுவனமான “ஷீன்” (Shein) கடை சமீபத்தில் திறக்கப்பட்டதைச் சுற்றி ஏற்கனவே சர்ச்சை நிலவுகிறது. BHV நிர்வாகம் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் பல பிராண்டுகள் தொடர்ந்து நடைபெறும் கட்டணத் தவறுகளுக்கும் “ஷீன்” வருகைக்கும் எதிர்ப்பாக விலகியுள்ளன.

BHV நிர்வாகம் புதிய தானியங்கி கட்டண மென்பொருள் காரணமாக தற்காலிக சிக்கல் ஏற்பட்டதாக விளக்கம் அளித்திருந்தாலும், நிலைமை இன்னும் சரியாகவில்லை. கிறிஸ்துமஸ் மற்றும் பிளாக்பிரைடே (Black Friday) விற்பனை காலம் நெருங்கியுள்ளதால், ஊழியர்கள் கடைகளின் மூடுதலால் கவலை தெரிவிக்கின்றனர். 

பல நிறுவனங்கள் ஆண்டின் முக்கிய வருமானத்தை இந்தக் காலத்தில் ஈட்டுவதால், BHV வணிக மையத்தின் எதிர்காலம் தற்போது நிச்சயமற்றதாக தெரிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்