Paristamil Navigation Paristamil advert login

TikTok வீடியோ பார்த்ததற்காக RATP ஊழியர் பணி நீக்கம்!!

TikTok வீடியோ பார்த்ததற்காக RATP ஊழியர் பணி நீக்கம்!!

11 கார்த்திகை 2025 செவ்வாய் 21:19 | பார்வைகள் : 434


போக்குவரத்து நிறுவனமான RATP-இல் பத்து ஆண்டுகளாக பணிபுரிந்த குளோஎ (Chloé) என்ற பெண் பணியாளர், தன் கடமையின் போது கைப்பேசியில் TikTok வீடியோ பார்த்ததாகக் கூறி அக்டோபர் மாத தொடக்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த நிகழ்வு, ஒரு “மர்ம வாடிக்கையாளர்” கண்காணிப்பின் போது, ஜூன் 17ஆம் தேதி இரவு Mairie-de-Montreuilஇல் நடந்துள்ளது. ஆனால் குளோஎ அது தான் இல்லை என மறுத்துள்ளார். தொழிற்சங்கங்கள் இதை அநீதியான முடிவாகக் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் RATP நிறுவனம் தெரிவித்ததாவது, குளோஎ முன்னதாகவே தாமதம், வராத தினங்கள், வாடிக்கையாளருடன் தவறான நடத்தை ஆகியவற்றுக்காக பல முறை ஒழுங்காற்று நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருந்தார். இவ்வாறு “மீண்டும் மீண்டும் நடந்த தவறுகள்” மற்றும் “வருந்தாத அணுகுமுறை” காரணமாகவே பணி நீக்கம் அவசியமாகியது என RATP நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தன்னை அவமதித்ததாகக் கூறும் குளோஎ, தற்போது இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞரின் உதவியுடன் மேல்முறையீடு செய்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்