Paristamil Navigation Paristamil advert login

SNCF : ஆறு மாதங்களுக்கு முன்பாக பயணச்சிட்டை முன்பதிவு! - புதன்கிழமை ஆரம்பமாகிறது!!

SNCF : ஆறு மாதங்களுக்கு முன்பாக பயணச்சிட்டை முன்பதிவு! - புதன்கிழமை ஆரம்பமாகிறது!!

11 கார்த்திகை 2025 செவ்வாய் 16:31 | பார்வைகள் : 705


பெப்ரவரி மாத பாடசாலை விடுமுறைக்கான பயணச்சிட்டை முன்பதிவுகள் நாளை புதன்கிழமை ஆரம்பமாகிறது.

ஜனவரி 8 ஆம் திகதி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரையான நாட்களில் பயணம் மேற்கொள்ள தேவையான பயணச்சிட்டைகள் நவம்பர் 12, புதன்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது. சில சேவைகளுக்கான முன்பதிவுகள் ஜூலை 3 ஆம் திகதி வரையான பயணங்களுக்கு முன்பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Lyon, Montpellier, Nice மற்றும் Marseille ஆகிய நகரங்களுக்கான பயணிச்சிட்டைகளையே ஆறு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்ய முடியும்.

சுற்றுலாத்துறையின் கோரிக்கைக்கு அமைவாக, மலைப்பிரதேசங்களுக்கு மேலதிகமாக TGV Inoui சேவைகளை இயக்கப்பட உள்ளதாகவும், ஐந்து வார நாட்களில் 850 தொடருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்