Paristamil Navigation Paristamil advert login

தனுஷ் படத்தில் பிரபு தேவா?

தனுஷ் படத்தில்  பிரபு தேவா?

11 கார்த்திகை 2025 செவ்வாய் 13:49 | பார்வைகள் : 188


‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தேரே இஸ்க் மெயின் இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க ஹிந்தி மொழியில் உருவாகி வரும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வரும் நவம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள சமீபத்திய தகவலின்படி, இந்த ‘தேரே இஸ்க் மெயின்’ திரைப்படத்தில் பிரபுதேவா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தனுஷ் மற்றும் பிரபுதேவா இருவரும் முதல்முறையாக ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்