Paristamil Navigation Paristamil advert login

நிக்கோலா சர்கோஷியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!!

நிக்கோலா சர்கோஷியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!!

10 கார்த்திகை 2025 திங்கள் 14:25 | பார்வைகள் : 523


முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில், அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Santé   சிறைச்சாலையில் இருந்து இன்று நவம்பர் 10 ஆம் திகதி நண்பகலின் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. லிபிய ஜனாதிபதி கடாஃபியிடம் இருந்து நிக்கோலா சர்கோஷி பணத்தை பெற்று அதனை 2017 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் Santé  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து தெரிவித்து, அவரை கண்காணிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவர் இன்று விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Santé  சிறைச்சாலையில் இருப்பது மிக கடினமாக உள்ளது என அவர் நீதிபதிகளிடம் தெரிவித்ததாக அறிய முடிகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்