Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பேருந்து விபத்து - ஒருவர் பலி - மாணவர்கள் உள்ளிட்ட பலர் காயம்

இலங்கையில் பேருந்து விபத்து - ஒருவர் பலி - மாணவர்கள் உள்ளிட்ட பலர் காயம்

10 கார்த்திகை 2025 திங்கள் 11:16 | பார்வைகள் : 165


அநுராதபுரம், தலாவ பகுதியிலுள்ள ஜயகங்க சந்திக்கு அருகில், பாடசாலை மாணவர்கள் அடங்கிய குழுவினர் பயணித்த பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அத்துடன் விபத்தில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்கள் தலாவ பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்