Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : நடுவீதியில் கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் மருத்துவமனையில்.. மூவர் கைது!!

பரிஸ் : நடுவீதியில் கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் மருத்துவமனையில்.. மூவர் கைது!!

9 கார்த்திகை 2025 ஞாயிறு 17:47 | பார்வைகள் : 922


பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு கத்திக்குத்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நவம்பர் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது.  Avenue Michel-Bizot வீதியில் குழு மோதல் இடம்பெற்றதாகவும், கத்தி, கட்டைகள் போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அங்கு நபர் ஒருவரை நால்வர் கொண்ட குழு ஒன்று தாக்கும் காட்சியை பார்த்துவிட்டு, சம்பவத்தை தடுத்து நிறுத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்கள் கழித்து அங்கிருந்து சில தெருக்கள் தள்ளி, மீண்டும் மோதல் இடம்பெற்றது. அதில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கானார். அச்சம்பவத்தில் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை.

இரு தாக்குதல்கள் சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதாகவும், இதன் தொடர்ச்சியே இரண்டாவது தாக்குதல் சம்பவம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்