Paristamil Navigation Paristamil advert login

கார் திருடும் சர்வதேச வலையமைப்பு தகர்ப்பு!!

கார் திருடும் சர்வதேச வலையமைப்பு தகர்ப்பு!!

9 கார்த்திகை 2025 ஞாயிறு 17:29 | பார்வைகள் : 761


இணையத்துடன் இணைக்கப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களின் உதவியால் கார்கள் திருடிய சர்வதேச குற்ற கும்பலை பிரான்ஸ் ஜென்டாமாரி தகர்த்துள்ளது. 

இல்-து-பிரான்ஸ் (Ile-de-France), யூர்-எ-லுவார் (Eure-et-Loir), கார்டு (le Gard) பகுதிகளில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இத்தாலியிலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விசாரணையின் போது ஆறு வாகனங்கள், 100,000 யூரோக்களுக்கும் மேற்பட்ட தொகை, ஆடம்பரப் பொருட்கள் மற்றும் ஒரு மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள திருட்டு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூன்று பேர் தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2023 செப்டம்பரில் ஜப்பானிய வாகன திருட்டுகள் அதிகரித்ததை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது. குற்றவாளிகள் இசை ஸ்பீக்கர்களை மறு செயல்முறைத்திட்டம் செய்து வாகனங்களை திறக்கவும் தொடங்கவும் (démarrage) பயன்படுத்தியுள்ளனர். 

இவை குறியாக்கப்பட்ட செய்தி பயன்பாடுகள் வழியாக விற்கப்பட்டுள்ளன. 2022 முதல் முக்கிய சந்தேகநபர் இச்சாதனங்களை கைவினை முறையில் தயாரித்து, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அனுப்பியதாக ஜென்டாமேரி தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்