சின்ன வெங்காயம் சிக்கன் கிரேவி
9 கார்த்திகை 2025 ஞாயிறு 11:57 | பார்வைகள் : 117
சின்ன வெங்காயம் சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:மல்லி 4tbs, சீரகம் 1tbs, மிளகு 2tbsசோம்பு 1tbs, பொட்டுக்கடலை tbs, இஞ்சி பூண்டு விழுது 2tbs, வரமிளகாய் 9, கிராம்பு 12, பட்டை 3 துண்டு, சின்னவெங்காயம் 1/4 kg, தக்காளி 3, சிக்கன் 1kg, மஞ்சள் தூள் ½tbs,கறிவேப்பிலை 1 கைப்பிடி,கொத்தமல்லி தழை, எண்ணெய் , உப்பு - தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
செய்முறை: முதலில் மல்லி 4tbs, சீரகம் 1tbs, மிளகு 2tbs, சோம்பு 1tbs, வரமிளகாய் 9, கிராம்பு 12, பட்டை 3 துண்டு ஆகியவைகளை நன்கு பொடிதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும், பிறகு ஒரு குக்கரில் நல்லெண்ணெய் 4tbs சேர்த்து நன்கு காய்ந்ததும் அதில் சிறிது பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவைகளை சேர்க்க வேண்டும், அத்துடன் சின்னவெங்காயம் 1/4kg சேர்த்து வதக்கி கொள்ளவும், பிறகு தக்காளி 4, இஞ்சி பூண்டு விழுது 2tbs, சிக்கன் 1kg ஆகியவைகளை சேர்த்து கலந்துகொள்ளவும்.
சிக்கனில் இருந்து தண்ணீர் பிரிந்து வரும் வரை நன்கு வதக்க வேண்டும். இந்த சமையத்தில் நாம் முதலில் மல்லி 4tbs, சீரகம் 1tbs, மிளகு 2tbs, சோம்பு 1tbs, வரமிளகாய் 9, கிராம்பு 12, பட்டை 3 துண்டு ஆகியவைகளை அரைத்து வைத்த பொடியை சேர்த்து, கலந்து விட்டு வதங்கவிட வேண்டும். பிறகு 1/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும்.
இதற்கு மேலும் சுவையைக் கூட்ட ஒரு ரகசிய மசாலா பொடி செய்ய வேண்டும். இதற்கு முதலில் பொட்டுக்கடலை 1tbs வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் 1tbs சேர்த்து கறிவேப்பிலை 1 கைப்பிடி சேர்த்து வறுத்து இரண்டையும் நன்கு பொடிதாக அரைத்து கொள்ளவும்.
சிக்கன் குக்கரில் 3 விசில் விட்டு நன்கு வெந்தபின் அரைத்து வைத்த பொட்டுக்கடலை மற்றும் கருவேப்பிலை பொடியை இத்துடன் சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சின்ன வெங்காயம் சிக்கன் கிரேவி ரெடி.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan