Paristamil Navigation Paristamil advert login

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது !

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் பட அறிவிப்பு  நாளை வெளியாகிறது !

9 கார்த்திகை 2025 ஞாயிறு 11:57 | பார்வைகள் : 155


விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் தீவிர அரசியலில் களம் காண இருப்பதால் அவர் தற்போது நடித்து வரும் ‘ஜன நாயகன்’ படம் தான் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அவர் திரைத்துறையிலிருந்து விலகும் நேரத்தில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் திரைத்துறையில் நுழைகிறார்.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் இணைந்து ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் படத்தை தயாரிக்கிறது. இதில் ஜேஎஸ்கே மீடியா என்பது ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனம். இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

பணத்தை மையமாக வைத்து ஆக்ஷன் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (நவ.10) படத்தின் டைட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் கையில் கட்டுடன் ரத்த காயத்துடன் பற்றி எரியும் பணத்துடன் ஒருவர் நின்றுகொண்டிருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பணத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவது உறுதியாகியுள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்