மெட்ரோவில் மறைந்த ரோலெக்ஸ் கொள்ளையன்: பரிஸ் முழுவதும் தேடுதல்!!
8 கார்த்திகை 2025 சனி 23:25 | பார்வைகள் : 445
பரிஸ் நகரின் 16வது வட்டாரத்தில் உள்ள l’avenue de Passy நகைக்கடையில் சனிக்கிழமை காலை ஒரு தனி கொள்ளையன் தாக்குதல் நடத்தியுள்ளார். காலை 10.30 மணியளவில், Opinel கத்தி ஒன்றை கையில் வைத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்த அவர், மொத்தம் 1 லட்சம் யூரோக்கள் மதிப்புள்ள ஐந்து தங்க ரோலெக்ஸ் கடிகாரங்களை பறித்து, நடைபயணமாக தப்பிச் சென்றுள்ளார்.
அவரை தடுக்க முயன்ற பாதுகாவலர் கீழே விழுந்தாலும் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் உடனடியாக விசாரணை தொடங்கியுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், குற்றவாளி மெட்ரோவில் தப்பியதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவரது தடயங்கள் பரிஸ் 14வது வட்டாரத்தில் காணாமல் போனதால், பிராந்தியம் முழுவதும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருவதோடு, சம்பவ இடத்தில் சான்றுகள் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan