Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பலூனில் புற்றுநோய்! - அவதானம் மக்களே!!

பலூனில் புற்றுநோய்! - அவதானம் மக்களே!!

8 கார்த்திகை 2025 சனி 07:00 | பார்வைகள் : 4165


பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு பலூன் வாங்குபவர்கள் புற்று நோய் பரவுவது குறித்து அவதான இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

அமேசான் இணையத்தளத்தில் விற்பனை செய்யப்படும் குறித்த பலூன் பொதியில் பயன்படுத்தப்படும் இரசாயனப்பொருள் மூலம் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவை மீளப்பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

ASIN: B0DRS6XQGT மற்றும் ASIN: B0CY2FCK2X ஆகிய இலக்கங்களைக் கொண்ட 100 பலூன்கள் கொண்ட பொதிகளிலேயே இந்த புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  Luobito   என பெயரிடப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பலூகளும், சிறிய மற்றும் பெரிய அளவுடைய பல வண்ணங்களை கொண்ட Fakindiy  எனும் பெயரிடப்பட்ட பலூன்களும் மீளப்பெறப்படுகின்றன.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என எவரும் அதனை பயன்படுத்தவேண்டாம் எனவும், இயந்திரம் மூலமாக காற்று ஊதியும் பயன்படுத்தவேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்