ஓய்வை அறிவித்த இந்திய கால்பந்து ஜாம்பவான்
8 கார்த்திகை 2025 சனி 05:02 | பார்வைகள் : 767
AFC ஆசிய கோப்பைக்கு தகுதி இந்தியா பெறாத நிலையில், சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வரும் என சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய கால்பந்தின் ஜாம்பவானாக கருதப்படுபவர் சுனில் சேத்ரி.
இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (151 போட்டிகள்) மற்றும் அதிக கோல்கள் (95 கோல்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார் சுனில் சேத்ரி.
மேலும், சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4வது இடத்தில் உள்ளார்.
சுனில் சேத்ரி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் குவைத் உடனான போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மனோலோ மிர்குவெஸ் கோரிக்கையை ஏற்று மீண்டும் அணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெறாத நிலையில், தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் அணிக்கு திரும்பிய பின்னர், சேத்ரி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு கோல் மட்டுமே அடித்தார்.
அதே போல் ISL தொடரில் பெங்களூரு FC அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் அவர், மீண்டும் ISL தொடரில் எங்கள் அணி வெற்றி பெற்றால், சர்வதேச அரங்கில் மீண்டும் ஒருமுறை கிளப்பின் வண்ணங்களை அணிய எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால், 42 வயதில் அது கடினம். இந்த தொடரில் 15 கோல்களை அடித்து விட்டு ஓய்வு பெறுவதே எனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
மேலும், என் ஓய்வு பெறும் முடிவைப் பற்றி காலித்திடம் சொல்வது கடினமாக இல்லை. நான் மீண்டும் அணியில் இணைந்த போது, தகுதிச் சுற்றில் இந்தியாவுக்கு உதவுவதே எனது ஒரே நோக்கமாக இருந்தது.
தகுதிச் சுற்றில் இல்லாதிருந்தால், நான் திரும்பி வந்திருக்க மாட்டேன். நாங்கள் வெளியேறியதும், மீண்டும் விலகிச் செல்வது எனக்கு நிம்மதியாக இருந்தது, பயிற்சியாளரும் அதை புரிந்துகொண்டார்." என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan