யாழில் 20 ஆண்டுகளுக்குப் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாய் பரிதாபமாக மரணம்
7 கார்த்திகை 2025 வெள்ளி 13:20 | பார்வைகள் : 786
யாழ்ப்பாணத்தில் சுமார் 20 வருடங்களின் பின்னர் ஒரே பிரசவத்தில், மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் ஒருவர், ஒரு மாதகால தீவிர சிகிச்சைபெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி - வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதுடையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் 20 வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில், இந்த வருடம் கடந்த மாதம் 07ஆம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இதனால் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்றையதினம் வியாழக்கிழமை(06) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், உயிரிழந்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூறமுடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan