பிக் பாஸ் சீசன் 9-ல் வெளியேறிய இரண்டு பேர் யார்?
7 கார்த்திகை 2025 வெள்ளி 12:26 | பார்வைகள் : 367
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி முதல் மாதம் மந்தமாக சென்றுகொண்டிருந்த நிலையில், இரண்டாம் மாதத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்த பின்னர் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வைல்டு கார்டு போட்டியாளராக பிரஜன், சாண்ட்ரா, அமித் பார்கவ் மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேருமே வந்த முதல் நாளில் இருந்து அனைவரைப் பற்றியும் புட்டு புட்டு வைத்து வருகிறார்கள். இத்தனை நாட்கள் இருக்குற இடம் தெரியாமல் இருந்த துஷார், அரோரா ஆகியோரை கோபப்படும் அளவுக்கு டிரிகர் செய்திருந்தார்கள் வைல்டு கார்டு போட்டியாளர்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடத்தப்பட்டது. இதற்காக பிக் பாஸ் வீடே ஆஹா ஓஹோ ஹோட்டலாக மாறியது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்களாக மாறினார்கள். இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்களான மஞ்சரி, தீபக் மற்றும் பிரியங்கா ஆகியோர் கெஸ்டாக வந்திருந்தார்கள். அவர்களை போட்டியாளர்கள் எப்படி கவனித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுக்கு பாயிண்ட்ஸும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வந்திருந்த கெஸ்டே கடுப்பாகும் அளவுக்கு இவர்கள் செயல்பாடுகள் இருந்ததால், கெஸ்ட் அனைவரும் அப்செட் ஆகி வெளியேறினர்,
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடு, ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை நடைபெறும். அன்றைய தினமே ஞாயிற்றுக் கிழமைக்கான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிடுவார்கள். ஆனால் இந்த வாரம் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடைபெறுவதால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடை ஒரு நாள் முன்னதாக... அதாவது இன்றே நடத்தி இருக்கிறார்கள். இதனால் இன்றைய தினமே டபுள் எவிக்ஷனும் நடந்திருக்கிறது. அதில் யார் எலிமினேட் ஆனார்கள் என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா, ரம்யா ஜோ, துஷார், பார்வதி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், திவாகர், வினோத், பிரவீன், சபரி, எஃப் ஜே, கெமி ஆகிய 12 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். அதன்படி முதல் ஆளாக இந்த வாரம் எலிமினேட் ஆனது ரம்யா ஜோ தான். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக துஷார் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். ஐந்தாம் வாரத்திலேயே டபுள் எவிக்ஷன் நடைபெறுவதால் மேலும் சில வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan