Paristamil Navigation Paristamil advert login

யாழில் ஆயுதங்கள் போதைப்பொருளுடன் சிக்கிய 9 பேர்

யாழில் ஆயுதங்கள் போதைப்பொருளுடன் சிக்கிய 9 பேர்

7 கார்த்திகை 2025 வெள்ளி 11:20 | பார்வைகள் : 165


யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேரும் பகுதி பகுதியாக ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் எழு பேரும் என ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்