Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான்- நேரலையை எப்படி பார்ப்பது?

மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான்- நேரலையை எப்படி பார்ப்பது?

7 கார்த்திகை 2025 வெள்ளி 10:20 | பார்வைகள் : 114


ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுகிறது.

ஹாங்காங்கில் நடைபெறும் ஹாங்காங் சிக்ஸஸ்(Hong Kong Sixes) தொடர் இன்று தொடங்கி நவம்பர் 9 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதில், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு நாடுகள், குவைத் வங்கதேசம், ஹாங்காங், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகள் மோதுகின்றன.

இன்று லீக் போட்டிகளும், நாளை தகுதி சுற்று போட்டிகளும், நவம்பர் 9 ஆம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது.

இதில், லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி, இன்று 1;05 மணிக்கு ஹாங்காங்கில் உள்ள டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் தொடங்க உள்ளது.

இதனை தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் மூலமாகவும், Fancode செயலி மூலமாகவும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணியில், ராபின் உத்தப்பா, ஸ்டூவர்ட் பின்னி, பாரத் சிப்லி, ஷாபாஸ் நதீம், அபிமன்யு மிதுன், பிரியங்க் பஞ்சால் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

அப்பாஸ் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியில், கவாஜா நஃபே, சாத் மசூத், முஹம்மது ஷாஜாத், மாஸ் சதாகத், அப்துல் சமத், ஷாகித் அஜீஸ் ஆகியோர் உள்ளனர்.

1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஹாங்காங் சிக்ஸ் தொடர், சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு வித்தியாசமான விதிமுறைகள் உள்ளது.
ஒரு வீரர் 50 ஓட்டங்கள் எடுத்து விட்டால், ஆட்டமிழக்காமல் ஓய்வு பெற்று விடுவார்.மற்ற துடுப்பாட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பிறகு மீண்டும் களத்திற்கு வரலாம்.

5 வது ஓவருக்கு முன்னர் 5 விக்கெட் விழுந்தாலும், 5 வீரர் ரன்னராக செயல்பட்டு, 6வது வீரர் துடுப்பாட்டம் ஆடலாம்.

கடந்த 2024 தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்று, நடப்பு சாம்பியனாக உள்ளது.


இதில், ஒரு அணிக்கு 6 வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். ஒரு இன்னிங்ஸிற்கு 6 ஓவர்கள் வீசப்படும். விக்கெட் கீப்பரை தவிர அனைவரும் ஒரு ஓவர் வீச வேண்டும்.

இதில்,பாகிஸ்தான் 5 முறை சாம்பியன் பட்டமும், 6 முறை 2வது இடமும் பிடித்து வெற்றிகரமான அணியாக உள்ளது. 2005 தொடரில் மட்டும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்