Paristamil Navigation Paristamil advert login

ஓலரோன் தீவில் வாகனத் தாக்குதல் - பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம்!!!

ஓலரோன் தீவில் வாகனத் தாக்குதல்  - பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம்!!!

6 கார்த்திகை 2025 வியாழன் 19:37 | பார்வைகள் : 478


லா ரோசெல் (La Rochelle) தேசிய நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்ததபடி பயங்கரவாத எதிர்ப்பு தேசிய நீதிமன்றம் (PNAT) இந்த வழக்கை ஏற்க மறுத்துவிட்டது, ஆனால் வழக்கைத் தொடர்ந்து கண்காணிக்கும் நிலையில் உள்ளது.

முக்கிய விவரங்கள்:

சந்தேக நபர் கைது செய்யப்படும் போது 'அல்லாஹ் அக்பர்' என்று கூச்சலிட்டதன் பின்னரும், பயங்கரவாதத் தாக்குதல் எனும் கோணம் நீக்கப்பட்டுள்ளது.

30 நிமிட குற்றவியல் சம்பவத்தில் ஐந்து நடைபயணிகள் மற்றும் ஈருருளிச் சாரதிகள் காயமடைந்தனர்

Poitiers மற்றும் Bordeaux புலனாய்வு அலுவலகங்கள் விசாரணையைத் தொடர்கின்றன.

 

மேற்கண்ட குற்றவாளி நேற்று 5ம் திகதி புதன்கிழமை ஓலரோன் தீவில் ('île d'Oléron)  பாதசாரிகள் மீதும் ஈருருளிப் பயணிகள் மீதும் வெண்டுமென்றே சிற்றுந்தினால் மோதியுள்ளார்.

காயமடைந்தவர்கள் மிக அவசரமாக அவசர சிகிச்சையின் உலங்குவானூர்தி மூலம் Poitiers மற்றும் La Rochelle. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது வரை 35 வயதுடைய இக் குற்றவாளியின் தகவல்கள் எதுவும் உளவுத்துறையிடம் இல்லை. தீவிரவாதம் தொடர்பான எந்தப் பதிவும் இல்லை  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே முதற்கட்டமாகப் பயங்கரவாத விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குற்றவாளி  Saint-Pierre d'Oléron ஒரு தற்காலிக  வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

அண்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய குற்றவாளி, தனக்கு உயிர்ப்பலிக்கான ஆணையிடப்பட்டது என விசாரணையில் தெரிவித்துள்ளார். இவர் மீதான மேலதிக குற்றங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இவரிற்கான மனநல மதிப்பீடு செய்யப்பட்டதோடு அவரின் வீடும் தேடுதலிற்கு உள்ளாக்கப்பட்டது. 
உள்துறை அமைச்சர் லொரோன் நுனெஸ் 'அவரிடம் தெளிவான மதக் குறிப்புகள் உள்ளன, ஆனால் இது குற்றத்தில் தீவிரமான பங்கு வகித்ததா என்பது தொடர்பான விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்