நீச்சல் குளத்திற்காக பள்ளம் தோண்டிய நபருக்கு கிடைத்த புதையல்
6 கார்த்திகை 2025 வியாழன் 15:45 | பார்வைகள் : 111
பிரான்சில், நீச்சல் குளத்திற்காக தன் வீட்டுத் தோட்டத்தில் பள்ளம் தோண்டிய நபருக்கு புதையல் ஒன்று கிடைத்துள்ளது.
பிரான்சிலுள்ள Neuville-sur-Saone என்னுமிடத்தில் வாழும் ஒருவர், நீச்சல் குளம் அமைப்பதற்காக தன் வீட்டுத் தோட்டத்தில் பள்ளம் தோண்டியுள்ளார்.
அப்போது அவருக்கு பிளாஸ்டிக் பைகளுக்குள் வைக்கப்பட்ட ஐந்து தங்கக் கட்டிகளும் ஏராளம் தங்கக் காசுகளும் கிடைத்துள்ளன.
அதை அவர் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், புதையல் கிடைத்த இடம், அகழ்வாராய்ச்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடம் இல்லை என்று கூறி, அதை அந்த நபருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் அதிகாரிகள்.
அந்த அதிர்ஷ்டசாலிக்குக் கிடைத்த புதையலின் மதிப்பு 800,000 டொலர்கள். இலங்கை மதிப்பில், அது 24,36,79,840.00 ரூபாய் ஆகும்!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan