போஸ்னியா ஹெர்சகோவினாவில் முதியோர் இல்லத்தில் பரவிய தீ - 11 பேர் பலி
6 கார்த்திகை 2025 வியாழன் 10:22 | பார்வைகள் : 844
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போஸ்னியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கிக் கொண்ட வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் தாங்களாக வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீட்புப்பணியில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மின்கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீவிபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan