கள்ளக்காதலில் ஈடுபவதற்கு முன் ஆண்கள் என்னென்ன செய்வார்கள் தெரியுமா?
5 கார்த்திகை 2025 புதன் 16:21 | பார்வைகள் : 148
திருமணம் மீறிய உறவிற்கு பாலின வேறுபாடு கிடையாது. ஆண்-பெண் இருவருமே தற்போது திருமணம் மீறிய உறவில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். திருமணம் என்ற புனிதமான உறவின் மீதான புரிதலும், கண்ணோட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. இது நம் நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மட்டுமின்றி குடும்ப அமைப்புகளையும் சிதைத்து வருகிறது.
கள்ள உறவில் ஈடுபடுவது என்பது ஒரே நாளில் நடந்து விடக்கூடியது அல்ல. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அதில் ஈடுபடுவதற்கு முன் நீண்ட மன போராட்டங்களை சந்திப்பார்கள். ஆண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபவதற்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் மற்றொரு பெண் மீது ஆர்வமாக இருப்பதை இந்த செயல்பாடுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் கள்ள உறவில் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அலுவலக நேரம் அதிகரிப்பது
வழக்கத்திற்கு மாறாக உங்கள் கணவர் இரவில் தாமதாக வந்தால் அல்லது விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் செல்ல வேண்டுமென்று கூறினால் அது முதல் எச்சரிக்கை மணியாக இருக்கலாம். அது அவர்கள் புதிதாக ஒருவரை சந்திக்க அல்லது அவர்கள் நேரம் செலவிட அலுவலகத்தை ஒரு காரணமாகக் கூறலாம்.
செல்போனை தொட அனுமதிக்காமல் இருப்பது
ஒருவரின் அனைத்து ரகசியங்களையும் ஒளித்து வைக்குமிடம் செல்போன்தான். கள்ள உறவில் ஈடுபடத் தயாராகும் ஆண்கள் தங்கள் செல்போனை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். அவர்களின் புதிய துணையின் மெசேஜ் அல்லது புகைப்படங்களை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் செல்போன் மீது மிகவும் பொஸசிவாக இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி போன் பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
மர்மமான நடத்தை
திருமணத்திற்குப் புறம்பான உறவை மறைக்க முயற்சிக்கும்போது,ஆண்கள் அவர்கள் சந்திக்கும் நபர்களைப் பற்றியும், அவர்களின் அன்றாட செயல்பாடுகள் பற்றியும் பொய் சொல்லத் தொடங்குவார்கள் அல்லது அவற்றை மறைக்கத் தொடங்குவார்கள். கால் வந்தால் அதை எடுத்துக்கொண்டே உடனே வெளியே செல்வார்கள் அல்லது போன் எப்போதும் சைலன்ட் மோடிலேயே இருக்கும். அதுவரை அவர்களுக்கு பிடித்த செயல்களுக்கு மாற்றாக புதிய விஷயங்களை செய்வார்கள். உதாரணமாக அதுவரை அவர்களுக்கு பிடிக்காத் நிறங்களில் சட்டை அணியத் தொடங்குவார்கள், ஏனெனில் அது 'வேறொருவருக்கு' பிடித்ததாக இருக்கும்.
புதிய பொழுதுபோக்குகளைக் கற்றுக்கொள்வது
புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வது என்பது எப்போதும் ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக வீட்டை விட்டு வெளியேறுவதற்காகவோ அல்லது வேறொருவருடன் நேரத்தை செலவழிப்பதற்காகவோ புதிதாக ஒரு விஷயத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினால் அவர்கள் புதிய உறவை நோக்கி நகர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நடத்தையில் மாற்றம்
கள்ள உறவில் ஈடுபடப்போகும் ஆண்களின் நடத்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அதுவரை கலகலப்பாக இருந்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மிகவும் கோபமாகவோ அல்லது விலகியிருக்கவோ தொடங்கக்கூடும். அவர்/அவள் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை விமர்சிப்பது, தொடர்ந்து மனநிலை சரியில்லாமல் இருப்பது, குளிர்ச்சியாகவும், விலகியும் இருப்பது போன்ற மனப்பான்மையிலும் கடுமையான மாற்றத்தைக் காட்டக்கூடும்...
குடும்பம் இல்லாதது போல காட்டிக்கொள்வது
அதுவரை குடும்பஸ்தனாக இருந்தவர்கள் திடீரென தங்கள் குடும்பத்தினர் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களிலிருந்து நீக்குவார்கள். வாட்சப் டிபியில் கூட அவர்களின் புகைப்படத்தை மட்டும்தான் வைப்பார்கள். பொதுவெளியில் தங்களுக்கென யாருமே இல்லாதது போலவும், அவர்கள் மிகவும் இளமையானவர்கள் போலவும் காட்டிக்கொள்ளத் தொடங்குவார்கள்.
திடீரென தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் தோற்றத்தைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருப்பார்கள். திடீரென தொப்பையைக் குறைக்க கடுமையாக முயற்சிக்கலாம், புது விதமான ஆடைகளை உடுத்தலாம், தலைமுடிக்கும், மேக்கப்புக்கும் அதிக கவனம் செலுத்தலாம். இதுபோல திடீர் மாற்றங்கள் அவர் வேறொருவரை ஈர்க்க முயற்சிப்பதன் அறிகுறிகுறியாக இருக்கலாம்.
பாலியல் நெருக்கத்தைத் தவிர்ப்பது
வேறொருவர் மீது புதிதாக ஆர்வம் அதிகரித்திருப்பதால் அவர்கள் தங்கள் மனைவி மீது ஈர்ப்பு குறைந்தவர்களாக காணப்படுவார்கள். அவர்களுடன் உடல்ரீதியான நெருக்கத்தைத் தவிர்க்கலாம், குற்ற உணர்ச்சியால் அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள தயங்கலாம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan