ராகுலின் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் கமிஷன்
6 கார்த்திகை 2025 வியாழன் 09:11 | பார்வைகள் : 546
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ள தேர்தல் கமிஷன், அங்கு மேல் முறையீடு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மறுப்பு
ஹரியானாவில் காங்கிரசின் ஓட்டுக்கள் திருடப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்ததுடன், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தது.
மீண்டும்
இந்நிலையில், இன்று ஹரியானாவில் நிருபர்களிடம் ராகுல் கூறுகையில், '' ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டு இருக்கிறது. 5.21 லட்சம் ஓட்டுகள் போலி. 93,174 ஓட்டுகள் போலியான முகவரிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த மால் ஹரியானாவில் ஓட்டு போட்டுள்ளார். அவரது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆதாரமில்லை
இதனை மறுத்துள்ள தேர்தல் கமிஷன் கூறியதாவது: ஹரியானாவில் வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக யாரும் எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. மோசடி என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. 90 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நடந்த தேர்தல் தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட்டில் 22 தேர்தல் வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
தேர்தலின் போது ஒரு வாக்காளர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு இருந்தாலோ அல்லது ஒரு வாக்காளரின் அடையாளம் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அது குறித்து ஆட்சேபனை தெரிவிக்க வேண்டியது காங்கிரஸ் ஓட்டுச்சாவடி முகவர்களின் கடமை. ஆனால், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின் போது அவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் இருக்கும் வாக்காளர் பாஜவுக்கு ஓட்டுப் போடுவார் என்ற ராகுலின் கருத்து தெளிவில்லை. அவர்கள் ஏன் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டு இருக்கக்கூடாது.
பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளால் வீட்டு எண் ஒதுக்கப்படாத வீடுகளுக்கு பூஜ்யம் என்ற வீட்டு எண்ணை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக., 1 முதல் அக்., 15 வரை பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணி நடக்கும் போது காங்கிரஸ் ஏன் ஒரு மேல்முறையீடு செய்யவில்லை.
இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan