Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

நடிகர் துல்கர் சல்மானுக்கு வந்த புதிய சிக்கல்..?

நடிகர் துல்கர் சல்மானுக்கு வந்த புதிய சிக்கல்..?

5 கார்த்திகை 2025 புதன் 14:20 | பார்வைகள் : 727


கல்யாண வீட்டில் பிரியாணி சாப்பிட்ட நபர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட அரிசி நிறுவனத்துக்கு விளம்பரம் செய்திருந்த நடிகர் துல்கர் சல்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘லோகா சாப்டர் 1’ திரைப்படம் வசூலில் மிரட்டியது. தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் ‘காந்தா’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட உள்ளது.
 

சினிமாவுக்கு நடுவே வெளிநாடுகளிலிருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த விவகாரத்தில் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், அமலாக்கத் துறையினர் மற்றும் சுங்கத்துறையினர் இந்த விஷயத்தில் சோதனை நடத்தினர். இந்நிலையில் தற்போது மற்றொரு சிக்கலில்

பிரபல அரிசு நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். பத்தனம்திட்டாவில் நடந்த ஒரு திருமணத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தின் அரிசியை பயன்படுத்தி சமைத்த பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக ஒரு கேட்டரிங் நிறுவனம் சார்பில் புகார் தரப்பட்டது. இது குறித்து விசாரிக்க, டிசம்பர் 3ம் தேதி அரிசி நிறுவனத்தின் உரிமையாளர், நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் நேரில் ஆஜராக நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்