Paristamil Navigation Paristamil advert login

துருவ் விக்ரமின் அடுத்த படத்தை இயக்க போவது யார்?

துருவ் விக்ரமின்  அடுத்த படத்தை இயக்க போவது யார்?

5 கார்த்திகை 2025 புதன் 14:20 | பார்வைகள் : 209


துருவ் நடிப்பில் வெளியான ‘பைசன்’ படம் இதுவரை 60 கோடிவரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். பைசன் ஹீரோ துருவ் அடுத்து  மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் என்று முன்பே தகவல்கள் உலாவின

பைசன் மாதிரியான கிராமத்து படம் நடித்தபின், மணிரத்னம் படத்தில் நடிக்க துருவ் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ‘ராவணன், பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்து இருக்கிறார். ஆகவே, தானும் தந்தை பாணியில் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். மணிரத்னமும் ஒரு சின்ன பட்ஜெட்டில், ஒரு காதல் படம், யூத்புல் படம் எடுக்க ஆசைப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விரைவல் துருவ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது .

வர்த்தக‌ விளம்பரங்கள்