இந்திய ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரருக்கு ஐசிசி தண்டனை - சூர்யகுமார் யாதவிற்கு அபராதம்
5 கார்த்திகை 2025 புதன் 08:09 | பார்வைகள் : 122
ஆசிய கோப்பையில் விதிமீறல்களில் ஈடுபட்ட இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி தண்டனை வழங்கியுள்ளது.
2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்காத விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், போட்டிக்கு பிந்தைய நேர்காணலில், இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ்(Suryakumar Yadav அரசியல் ரீதியாக பேசியதும் விமர்சனத்தை பெற்றது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சியிடம் புகார் அளித்தது.
இதே போல், சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில், மைதானத்தில் சர்ச்சைக்குரிய சைகைகளை வெளிப்படுத்தினர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூப்(Haris Rauf), பீல்டிங் செய்யும் போது இந்திய ரசிகர்களை நோக்கி 6-0 என்ற சைகையையும், கையை விமானம் பறப்பது போல் காட்டியும் உடனே அதனை சுட்டு வீழ்த்தியது போலவும் சைகை காட்டினார்.
அதாவது, ஆபரேஷன் சிந்தூரின் போது 6 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், அதை வைத்து ரசிகர்களை சீண்டியுள்ளார்.
அதே போல், அரை சதமடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான்(Sahibzada Farhan) பேட்டை துப்பாக்கி சுடுவது போல் பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
பஹல்காம் தாக்குதலில், 26 இந்திய சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை குறிப்பிட்டு இவ்வாறு செய்தார்.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் இருந்து ஐ.சி.சியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஐ.சி.சி, விளையாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பிரிவுகளின் கீழ் ஹாரிஸ் ரவூப்பிற்கு 2 போட்டிகளுக்கும் தலா 2 Demerit புள்ளிகள் என மொத்தம் 4 Demerit புள்ளிகள் விதித்துள்ளது.
24 மாதங்களில் 4 புள்ளிகள் பெற்றால் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் 2 போட்டிகளில் விளையாட ஹாரிஸ் ராஃப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே குற்றத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹானிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, 1 Demerit புள்ளி வழங்கப்பட்டது.
போட்டிக்கு பின்னர் தெரிவித்த அரசியல் கருத்து காரணமாக இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ்விற்கு 2 Demerit புள்ளி வழங்கப்பட்டதோடு, போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan