வாய்ப்பை தவறவிட்ட எம்பாப்பே! ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி
5 கார்த்திகை 2025 புதன் 08:09 | பார்வைகள் : 124
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் லிவர்பூல் அணி 1-0 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்தின் Anfield மைதானத்தில் நடந்த UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை, ரியல் மாட்ரிட் வீரர் கைலியன் எம்பாப்பே தவறவிட்டார்.
அதன் பின்னர் இரு அணிகளின் கோல் கீப்பர்களும் அபாரமாக செயல்பட்டு கோல்களை தடுத்தனர். இதனால் முதல் பாதி 0-0 என்று இருந்தது.
ஆனால் 61வது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் (Alexis Mac Allister) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து வினிசியஸ் ஜூனியர் 75வது நிமிடத்தில் பாஸ் செய்த பந்தை எம்பாப்பே கோலாக மாற்ற தவறினார்.
இறுதியில் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
கோல் வாய்ப்புகளை தவறவிட்ட எம்பாப்பேவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan