Paristamil Navigation Paristamil advert login

Shein மற்றும் Temu மீது விசாரணை!!

Shein மற்றும் Temu மீது விசாரணை!!

5 கார்த்திகை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1000


சீனாவின் புகழ்பெற்ற இணையவழி வர்த்தக நிறுவனங்களான  Shein மற்றும் Temu மீது பிரான்ஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரான்சில் இணையவழி மூலம் பாலியல் தேவைகளுக்கான பொம்மைகளை சிறுவர்களுக்கு விற்றதாக குற்றம்சாட்டப்பட்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Shein, Temu, AliExpress மற்றும் Wish போன்ற சீனாவின் புகழ்பெற்ற நிறுவனங்கள் மீது இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரெஞ்சு வழக்கறிஞர் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு எவ்வித அறிவித்தலும் இன்றில் இந்த இவ்வகை பொம்மைகளை திரையில் காண்பித்ததோடு மட்டுமில்லாமல், அதனை அவர்களுக்கு விற்பனையும் செய்துள்ளனர். சிறுவர்களுக்கு பாலியல் தேவைகளுக்காக பொம்மைகள் விற்பது மிக கடுமையான குற்றமாகும்.

இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நிறுவனங்களுக்கு பிரான்சில் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சென்ற புதன்கிழமை Shein நிறுவனம் பிரான்சில் நிரந்தரமான கடை ஒன்றை திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வர்த்தக‌ விளம்பரங்கள்