Paristamil Navigation Paristamil advert login

சிறப்பு பொதுக்குழு கூட்டம்: கட்சியினருக்கு விஜய் கட்டுப்பாடு

சிறப்பு பொதுக்குழு கூட்டம்: கட்சியினருக்கு விஜய் கட்டுப்பாடு

5 கார்த்திகை 2025 புதன் 10:11 | பார்வைகள் : 138


த.வெ.க., தலைவர் விஜய், செப்டம்பர் 27ம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். மாநில நிர்வாகிகள் பலரும் தலைமறைவாகினர்.

பனையூரில் உள்ள வீட்டில் விஜய் முடங்கினார். இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கட்சி பணிகளில், விஜய் மற்றும் மாநில நிர்வாகிகள், கவனம் செலுத்த துவங்கி உள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள 'போர் பாயின்ட் ஷெரட்டன்' தனியார் விடுதியில், இன்று காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார்.

இக்கூட்டத்தில் பங்கேற்கும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என, 1,400க்கும் மேற்பட்டவர்களுக்கு, வாகன பாஸ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

தொண்டர்கள் ஆர்வ கோளாறில், கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களில் வந்து குவியாமல் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை த.வெ.க., தலைமை விதித்துள்ளது.

அதன்படி, அடையாள அட்டை வைத்துள்ளவர்களை தவிர, மற்றவர்கள் யாரும் வரவேண்டாம் என, த.வெ.க., தலைமையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்