ஈரானில் மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்த பிரான்ஸ் பிரஜைகள் விடுவிக்கப்பட்டதாக மக்ரோன் அறிவிப்பு!!
4 கார்த்திகை 2025 செவ்வாய் 21:59 | பார்வைகள் : 445
ஈரானில் மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்த பிரான்ஸ் பிரஜைகளான சேசில் கோலர் (Cécile Kohler) மற்றும் ஜாக் பரிஸ் (Jacques Paris) விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று குடியரசுத் தலைவர் இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
41 வயதான ஆசிரியையும், 72 வயதான ஓய்வு பெற்ற பேராசிரியருமான இவர்கள் 2022 மே மாதத்தில் கைது செய்யப்பட்டு, உளவு குற்றச்சாட்டில் முறையே 20 மற்றும் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருந்தனர். தற்போது அவர்கள் ஏவின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்குச் செல்கின்றனர். மக்ரோன் இதை “முக்கியமான முதல் கட்டம்” எனக் கூறி, அவர்களை விரைவில் பிரான்சுக்கு திருப்பி அனுப்பும் முயற்சிகள் நடைபெறுகின்றன என தெரிவித்துள்ளார்.
இருவரின் குடும்பத்தினர் அவர்கள் கடுமையாக சோர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சேசிலின் சகோதரி நோஎமி (Noémie Kohler) , “உயிர் பயத்தில் ஒவ்வொரு நாளும் சிறையில் இருப்பது பிரான்ஸ் அரசின் பொறுப்பை அதிகரிக்கிறது” என கூறினார். அவர் அவர்களுடன் எட்டு நிமிடங்கள் மட்டுமே வீடியோ அழைப்பில் பேச முடிந்தது என்றும், அவர்கள் மிகவும் சோர்வடைந்திருந்தனர் என்றும் கூறினார். பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் இந்த தண்டனையை “அநியாயமானது” எனக் கண்டித்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan