TVS அறிமுகப்படுத்தும் புதிய மின்சார மோட்டார் சைக்கிள் - டீசர் வெளியீடு
4 கார்த்திகை 2025 செவ்வாய் 16:01 | பார்வைகள் : 132
TVS மோட்டார் நிறுவனம், 2025 EICMA கண்காட்சியை முன்னிட்டு புதிய மின்சார மோட்டார் சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது 'Apache EV' என அழைக்கப்படும் மின்சார naked streetfighter வகையைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட டீசர் படத்தில், LED லைட்கள், பின்புற டிஸ்க் பிரேக் மற்றும் கவரக்கூடிய ஆக்கிரோஷமான வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த மொடல், TVS நிறுவனத்தின் Apache வரிசையை மின்சார துறைக்கு விரிவுபடுத்தும் முயற்சியாகும்.
'Raw electric power' என்ற வார்த்தையை டீசரில் பயன்படுத்தியிருப்பது, இந்த மொடல் சாதாரண day-to-day commute-ஐ விட அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்பதை குறிக்கிறது.
புதிய மொடலின் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், EV துறையில் உள்ள வல்லுநர்கள், இது mid-mounted electric motor, fast charging வசதி மற்றும் 120 கி.மீ. வரை நகர்ப்புற பயணத்திற்கு ஏற்ற ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என நம்புகின்றனர்.
48V அல்லது அதற்கு மேற்பட்ட battery கட்டமைப்பை பயன்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.
இந்த மொடல், TVS நிறுவனத்தின் EICMA 2025-இல் அறிமுகப்படுத்தவுள்ள 6 புதிய மொடல்களில் ஒன்றாகும்.
இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில், Ultraviolette மற்றும் Revolt போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan