இங்கிலாந்தில் தடம்புரண்ட ரயில்: மக்களுக்கு ஒரு எச்சரிக்கை
3 கார்த்திகை 2025 திங்கள் 16:28 | பார்வைகள் : 330
இங்கிலாந்தில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ள நிலையில், குறிப்பிட்ட பகுதிக்கு பயணிக்கவேண்டாம் என மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
இங்கிலாந்தின் Cumbria பகுதியிலுள்ள Shap என்னுமிடத்துக்கு அருகே Avanti West Coast train என்னும் பயணிகள் ரயில் 03-11-2025 அதாவது, நவம்பர் மாதம் 3ஆம் திகதி, காலை 6.10 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
அந்த ரயிலில் 130 பேர் பயணித்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் நான்கு பேருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பிரித்தானிய போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
நிலைமை சீராக சில நாட்களாவது ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அப்பகுதிக்கு பயணிக்கவேண்டாம் என்றும் ரயில்வே நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Coupons
Annuaire
Scan