மகளிர் சாம்பியன்களுக்கு கோஹ்லி வாழ்த்து...
3 கார்த்திகை 2025 திங்கள் 13:33 | பார்வைகள் : 132
முதல் முறையாக மகளிர் உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணியினருக்கு விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகுடம் சூடியது.
மூன்று முறை இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியுற்ற இந்திய அணி முதல் முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் (Virat Kohli) தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக, உங்கள் அச்சமற்ற கிரிக்கெட் மற்றும் நம்பிக்கையால் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் நீங்கள் அனைவரும் பாராட்டுகளுக்கு தகுதியானவர்கள், இந்த தருணத்தை முழுமையாக அனுபவியுங்கள். ஹர்மன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்" என்று கூறியுள்ளார்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan