கனடாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து- சாரதி பலி
3 கார்த்திகை 2025 திங்கள் 13:33 | பார்வைகள் : 283
கனடாவின் ஒன்ராறியோவில் பள்ளிப்பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனடாவின் Kitchenerஇல் அமைந்துள்ள Kitchener Waterloo Collegiate என்னும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் 02.11.2025 சுற்றுலா செல்வதற்காக தங்கள் பள்ளிப்பேருந்தில் புறப்பட்டுள்ளார்கள்.
காலை 9.40 மணியளவில், லண்டன் என்னுமிடத்துக்கு அருகில் வரும்போது, திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளம் ஒன்றில் கவிந்துள்ளது.
பேருந்தின் சாரதியான 52 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பிள்ளைகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், சாரதிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், அதனால்தான் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாகவும் சில மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், பேருந்தில் 42 பேர் இருந்த நிலையில், சில பிள்ளைகளே அவசர வழியின் கதவைத் திறந்து மற்ற மாணவ மாணவிகளை பேருந்திலிருந்து வெளியே வர உதவியிருக்கிறார்கள்.
விபத்தில் காயமடைந்த நான்கு பேர் மட்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
பிள்ளைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan