ஜெர்மனியில் வேகமாகப் பரவி வரும் பறவைக் காய்ச்சல்
3 கார்த்திகை 2025 திங்கள் 11:09 | பார்வைகள் : 249
ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக கூறப்படுகின்றது.
ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் , நோய் பரவாமல் தடுக்க சுமார் 500,000 கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.
இந்த நோய் மேலும் மோசமடையக்கூடும் எனவும், நிலைமை ஏற்கனவே 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் காலத்தைப் போலவே உள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், முட்டை விலைகள் விரைவில் உயரக்கூடும். பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி, 2.50 யூரோக்களிலிருந்து 3.50 யூரோக்களுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியில் உட்கொள்ளப்படும் வாத்துகளில் சுமார் 20 சதவீதம் மட்டுமே உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகுதி, ஹங்கேரி மற்றும் போலந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதேவேளை கோழிகளை நன்கு சமைக்கவும், பச்சை முட்டைப் பொருட்களைத் தவிர்க்கவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.





திருமண பொருத்தம்
இன்றைய ராசி பலன்


















Bons Plans
Annuaire
Scan